Connect with us

Football

லா லிகா: கிரௌனா அணியை 4-0 என வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது ரியல் மாட்ரிட்!!

நேற்று நடைபெற்ற லா லிகா லீக் ஆட்த்தின் இரண்டாவது வாரத்தின் போட்டிகளில் கிரௌனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.

அதில் ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கிரௌனா அணியின் க்ரேஸியா ஒரு கோல் அடித்தார். அதற்கு பதில் தரும் வகையில் மாட்ரிட் அணி கேப்டன் ராமோஸ் ஒரு பெனால்டி வாய்ப்பை கோல் ஆக்கினார்.

இரண்டாவது பாதியை துவங்கிய சில நிமிடங்களில் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா 52 வது நிமிடத்தில் கிடைத்த பேனால்டி வாய்ப்பை லாவகமாக கோல் ஆக்கினார். மற்றுமொரு நட்சத்திர வீரர் கேரத் பேல் கோல் அடித்து முன்னிலை படுத்தினார்.

3-1 என இருந்த நிலையில்  பென்சிமா மீண்டும் ஒரு கோல் அடித்து 4-1 என வெற்றிபெற செய்தார்.

இதனால் 2 போட்டிகளில் மொத்தம் 6 கோல் மற்றும் ஒரு கோல் விட்டுக்கொடுத்தது என 5 கோல்கள் கொண்டு லீக் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

இரண்டாவது இடத்தில் பார்சிலோனா உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See