Connect with us

Football

லா லிகா: ரொனால்டோ இல்லையென்றாலும், தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்றது ரியல் மாட்ரிட்!!

ஸ்பெயின் நாட்டின் கால்பந்து லீக் தொடரான லா லிகா போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மற்றும் லேகன்ஸ் இரு அணிகளும் களம் கண்டனர்.

9 வருடங்களுக்கு பிறகு ரொனால்டோ இல்லாமல் சந்திக்கும் சீசன் என்பதால், ரியல் மாட்ரிட் அணிக்கு சற்று பலம் குறைந்தே காணப்படும் என்ற கருத்துகளும் எழுந்து வந்த நிலையில், தொடர்ந்து 3 லீக் போட்டிகளை வென்று அசத்தி வருகிறது ரியல் மாட்ரிட் அணி.

நேற்றைய போட்டியில் லேகன்ஸ் அணியை எதிர்கொண்ட மாட்ரிட் அணி, 16வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கேரத் பேலே ஒரு கோல் அடித்து ரியல் மாட்ரிட் கணக்கை துவங்கி வைத்தார். அதனை அடுத்து லேகன்ஸ் வீரர் காரிலோ பெனால்டி மூலம் 4வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார்.

முதல் பாதி சமனில் முடிந்தது.

இரண்டாவது பாதி துவங்கிய சிறிது நேரத்தில் மற்றுமொரு நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா ஒரு கோல் அடித்தார். மேலும், 61 வது நிமிடத்தில் மற்றுமொரு கோல் என ரியல் மாட்ரிட் அணியை 3-1 என்ற நிலைக்கு கொண்டு சென்றார்.

மாட்ரிட் அணியின் கேப்டன் ராமோஸ் 66வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோல் ஆக்கினார். இதனால் இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என வென்றது.

மாட்ரிட் அணி புள்ளிபட்டியலில் 2 கோல் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பட்டியலின் முதல் இடத்தில் பார்சிலோனா அணி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See