Connect with us

Football

லா லிகா: 8-2 என மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த பரிசேலோனா!! மீண்டும் பட்டியலில் முதலிடம்!!

ஸ்பெயின் நாட்டின் லீக் போட்டியான லா லிகா தொடரின் நேற்றைய போட்டியில் ஹூஸ்க்கா மற்றும் பார்சிலோனா இரு அணிகளும் மோதின.

துவக்கத்தில் 3வது நிமிடத்தில் ஹுஸ்க்கா அணியின் ஹெர்னாண்டஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா ரசிகர்கள் உறைந்து போனார்கள். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கரணம், நட்சத்திர வீரர் மெஸ்ஸி 16வது நிமிடத்தில் இரு கோல் அடித்து சமன் செய்தார்.

அதை தொடர்ந்து 24வது நிமிடத்தில் ஹுஸ்க்கா அணி வீரர் ஒரு சொந்த கோல் அடித்து அணியை பரிதாப நிலைக்கு தள்ளினார். தற்போது பார்சிலோனா 2-1 என இருந்தது. மேலும்,  39வது நிமிடத்தில் நட்சத்திர முன்கள வீரர் சுவாரேஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 3-1 என ஆக்கினார்.

42 வது நிமிடத்தில் ஹுஸ்க்கா அணி வீரர் அலெஜாண்ட்ரா ஒரு கோல் அடித்து முதல் பாதியை 2-3 என முடித்தார்.

முன்னிலையுடன் இரண்டாவது பாதியை துவங்கிய பரிசேலோனா, நட்சத்திர வீரர்கள் டெம்பெலே 48வது நிமிடத்திலும், ராக்கிடிச், மெஸ்ஸி மற்றும் ஜோர்டி ஆல்பா ஆகியோர் முறையே 52, 61 மற்றும் 81வது நிமிடங்களில் கோல் அடித்து 7-2 என பலம் வாய்ந்த நிலையில் இருந்தனர்.

இறுதியாக 90+3 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோல் ஆக்கினார் சுவாரேஸ். இதன்மூலம், இறுதியில் 8-2 என பார்சிலோனா வென்று பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

அதிகபட்சமாக, மெஸ்ஸி மற்றும் சுவாரேஸ் இருவரும் தலா இரண்டு கோல்கள் அடித்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See