Connect with us

Cricket

வீடியோ: உணவு இடைவேளை முடிந்த முதல் பந்திலேயே ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட ஷமி – திரும்பிக்கூட பார்க்காமல் சென்ற பேர்ஸ்டோ

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு மிகவும் அற்புதமாகவும் மெச்சத்தக்க வகையிலும் உங்களது. கிட்டத்தட்ட நடந்த நான்கு போட்டிகளிலும் அனைத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். அஸ்வின் ஒருசில விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.

ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதும் இல்லாத அளவு அற்புதம் படைத்து வருகின்றனர். இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இங்கிலாந்து அணி மெல்ல மெல்ல தனது முன்னிலையை அதிகரித்து வருகிறது.

உணவு இடைவேளையின்போது 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி இடைவேளை முடிந்து ஆடுகளத்திற்குள் வந்தது. தனது பந்துவீச்சை தொடர்ந்த முகமது ஷமி உணவு இடைவேளை முடிந்து முதல் பந்திலேயே இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவின் ஸ்டம்புகளை தெரிக்கவிட்டார்.அவருக்கு என்ன என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

அந்த அளவிற்கு அற்புதமான பேட்டீற்கும் பேடுக்கும் இடையில் சென்று அவரது ஸ்டம்பை பறக்கவிட்டவுடன் அது கண்டிப்பாக க்ளீன் போல்ட் தான் என்று நினைத்தபடி திரும்பிக்கூட பார்க்காமல் டக் அவுட்டில் நடையை கட்டிவிட்டார் பேர்ஸ்டோ.

அந்த வீடியோ கீழே உள்ளது….

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See