Connect with us

Cricket

வீடியோ: ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தி மாஸ் காட்டிய பும்ரா!!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று டாஸ் வென்று பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி. துவக்கத்திலிருந்து அருமையாக இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சாளர்களை கடுமையாக சோதித்தாடினர்.

ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் விடுவதாக தெரியவில்லை. தொடர்ந்து அருமையாக வீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 63வது ஓவரில் மட்டும் 2 விக்கெட் வீழ்த்தி இந்திய அணி மீண்டும் போட்டிக்குள் திருப்பினார்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு பிறகு கிடைத்த இந்த இரண்டு விக்கெட்டுகள் இந்திய அணிக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. 63 ஒவரின் 2வது பந்தில் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக்கின் விக்கெட்டையும் 5வது பந்தில் தற்போதைய கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See