Connect with us

Cricket

வீடியோ: தோனியை போன்று ‘பார்க்காமல்’ ரன் அவுட் செய்ய முயற்சித்த இஷான் கிஷான் – ஆனால் முடிவில் நடந்தது இதுதான்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்கள் ஒருவர் ஆவார். சொல்லப்போனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவர்தான்  உலகின் விக்கெட் கீப்பர் எனவும் சொல்லலாம்.

இவரது விக்கெட் கீப்பர் திறமை எப்போதும் மெச்சத்தக்க வகையில் இருக்கும். வித்யாசமாக ஏதாவது செய்வது விக்கெட் கீப்பிங்கில் அசத்துவது இவரது வாடிக்கை. இந்த வகையில் இக்கட்டான சூழ்நிலையில் பந்து தன்னை  நோக்கி வரும்போது அவர் பந்தை வாங்கி ஸ்டம்புகள் இருக்கும் இடம் பார்க்காமல் சரியாக ஸ்டம்பின் மேல் பந்தை தள்ளுவார். அதில் பல விக்கெட்டுகளையம் எடுத்துள்ளார் தோனி.

தற்போது இந்தியாவின் இளம் வீரர் இஷான் கிஷான் தொனியை போன்றே  முயற்சித்து எடுபடாமல் போயுள்ளார். துலிப் கோப்பை தொடரில் இந்திய ரெட் அணிக்காக ஆடி வரும் அவர் இது போன்று செய்துள்ளார். ஆனால், அவர் பந்தை பார்க்காமல் வீசும் முன்னரே பேட்ஸ்மேன் கிரீஸை அடைந்துவிட்டார்.
இந்த வீடியோவ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

 

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See