Connect with us

Cricket

வீடியோ; மூஞ்சிக்கு மேல் வந்த கேட்சை அற்புதமாக வளைந்து பிடித்த ரகானே !!

இந்திய அணிக்கு கடந்த இரண்டு நாட்களாக தொல்லை கொடுத்து வந்த பட்லரை, இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே தனது மிரட்டல் கேட்ச் மூலம் வெளியேற்றினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிர்க்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் போன்ற வீரர்களின் விக்கெட்டை எல்லாம் எளிதாக வீழ்த்திவிட்ட இந்திய அணி, ஜாஸ் பட்லரின் விக்கெட்டை மட்டும் வீழ்த்த முடியாமல் நேற்றில் இருந்து திணறி வந்தது.

வீடியோ;

இந்நிலையில் இந்திய அணியின் பொறுமையை அதிகமாக சோதித்து வந்த ஜாஸ் பட்லர் 133 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா வீசிய ஒரு பந்தை பின்பக்கமாக பவுண்டரி அடிக்க முயன்றார், அதனை இந்திய அணியின் துணை கேப்டனான ரஹானே தனது சாதூர்யமான கேட்ச் மூலம் அசால்டாக பட்லரை வெளியேற்றினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See