Connect with us

Cricket

வீடியோ: ரவி சாஸ்திரி ஆப்சன்ட் ஆன நேரத்தில் அணிக்கு பயிற்சி கொடுக்கும் தல தோனி!

ஆசிய கோப்பை போட்டியின் 4-வது ‘லீக்’ ஆட்டம் துபாயில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா – ஹாங் காங் அணிகள் மோதுகின்றன.

கேப்டன் விராட் கோலிக்கு ஆசிய கோப்பையில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் 3 ஒருநாள் தொடரை கைப்பற்றி இருக்கிறார். இதனால் இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற முடியும் என்ற நம்பிக்கையோடு உள்ளது.

கத்துக் குட்டியான ஹாங் காங்கை இந்திய அணி எளிதில் வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி இடத்தில் இடம் பெற போவது யார்? என்ற ஆர்வத்துடன் எதிரநோக்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் அம்பதி ராயுடு கோலியின் இடமான 3-வது வரிசையில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See