Connect with us

Cricket

வெறும் வாயில் வடை சுடாதீர்கள்; சேவாக் காட்டம் !!

தாங்கள் தான் உலகின் தலைசிறந்த அணி என்று வெறும் வாயில் சொல்வதை விடுத்து செயலில் காட்டுங்கள் என இந்திய அணியை சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தொடரையும் இழந்துள்ளது.

இதனையடுத்து பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், வெறும் வாயில் மட்டுமே பேசி கொண்டிருக்காமல் சிறந்த அணி என்பதை செயலில் காட்டுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேவாக் பேசியதாவது, “சிறந்த டிராவலிங் டீம் என்று வாயில் சொன்னால் போதாது. செயலில் காட்ட வேண்டும். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் மனதில் நினைப்பதை பேசிவிட்டு போகலாம். ஆனால் சிறந்த அணி என்றால் அதை களத்தில் காட்ட வேண்டும். அதைவிடுத்து டிரசிங் ரூமில் அமர்ந்துகொண்டு சிறந்த அணி நாங்கள் தான் என்று வாயில் மட்டுமே சொல்லி கொண்டிருக்க கூடாது. களத்தில் காட்ட வேண்டும்” என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See