Connect with us

Cricket

வெற்றிக்கு காரணம் இவர்தான்: கோலி பெருமிதம்

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றவுடன் வலிமையான இங்கிலாந்து அணிக்கெதிரான இந்திய அணி, இனி பொட்டளம் போல் சுங்கிவிடும் என் எதிர்பார்த்த நிலையில், மூன்றாவது போட்டியில் தொய்ருப்பி அடித்து வெற்றிய ருசித்துள்ளது.

இந்திய போட்டியில் தவான் முதல் இஷாந்த் சர்மா வரை அனைத்து வீரர்களும் தங்களது பங்களியப்பை அளித்தனர்.  முக்கிய்மாக பாண்டியா மற்றும் ஜஸ்பிரிட் பும்ராவை கூறலாம். ஆனால், போட்டிக்குப் பின் பேசிய விராட்…. வெற்றிக்கு அஜிங்கியா ரகானேவின் ஆட்டம் தான் முக்கிய காரணமாக அமைந்தது என்று புகழ்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய கேப்டன் கோலி…..

ரஹானேவின் இன்னிங்ஸ் மிக முக்கியமாக அமைந்தது. உணவு இடைவேளைக்கு முன்பு புஜாராவை இழந்த பிறகு ரஹானே பாசிட்டிவாக ஆடினார். இதற்காகத்தான் அவரை நாங்கள் விரும்புகிறோம். அவர் ஆட்டத்தின் போக்கையும், தன்மையையும் மாற்றக்கூடியவர். அதைத்தான் அவர் செய்தார்.

இங்கிலாந்து பவுலர்கள் தரமான பவுலர்கள் எனவே அவர்களுக்கு எதிராக ரன்களை எடுக்க தைரியம் தேவை. இதைத்தான் முதல் இன்னிங்ஸில் ரஹானேவும், 2வது இன்னிங்சில் புஜாராவும் செய்தனர்.

 

எங்கள் உடற்தகுதி, மனநிலை என்று அனைத்திலும் கவனம் செலுத்தினோம். தளர்வான பந்துகளைக் குறைத்தோம். இன்னும் டெஸ்ட் போட்டிகளை ஆட ஆட அவர்கள் இன்னும் மேம்படுவார்கள். அவர்கள் ஓடி வந்து வீசுவதைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See