Connect with us

Cricket

வெஸ்ட் இண்டீஸை கதற கதற அடித்த இந்தியா – இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அறிமுக வீர்ராக களமிறங்கிய பிருத்வி ஷா 134 ரன்கள் எடுத்தார். புஜாரா 86 ரன்களும் கேப்டன் விராத் கோலி 139 ரன்களும் ரிஷாப் பன் ட் 92 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 100 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிஷூ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தது.

அடுத்த வந்த லெவிஸ், கேப்ரியல் ஆகியோரையும் அஸ்வின் சாய்க்க, அந்த அணி 48 ஓவர்களில் 181 ரன்னுக் கு அனைத்து விக்கெட்டையும் இழந்து பாலோ ஆன் பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டையும் ஷமி 2 விக்கெட் டையும் உமேஷ் யாதவ், குல்தீப், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் மீண்டும் வந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See