Connect with us

Cricket

வைரல் வீடியோ: தடைகளை மீறி தனது ஹீரோவை பார்க்க மைதானத்திற்குள் ஓடிவந்து கட்டிப்பிடித்த விராட் கோலி ரசிகன்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் பாதுகாப்பை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியை நோக்கி ஓடினார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விராட் கோலியை கட்டிப்பிடித்தார். அத்துடன் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்து விராட் கோலி அந்த ரசிகரிடம் இருந்து விலகினார்.பின்னர் அந்த ரசிகர் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விரும்பினார். விராட் கோலி சம்மதம் தெரிவிக்க மகிழ்ச்சியுடன் அந்த ரசிகர் செல்பி எடுத்தார்.

 

 

https://www.instagram.com/p/Bogii1rnIYh/?utm_source=ig_embed

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See