Connect with us

Asian Games

ஸ்குவாஷ் மங்கைகள் அபாரம்: இதில் மட்டும் 4வது பதக்கம்!!

ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் மங்கைகள் ஜோஸ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிக்கல் ஆகியோர் இணைந்து இந்தியாவிற்கு அந்த போட்டியில் நான்காவது பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இருவரும் தங்கத்திற்கான மகளிர் இரட்டையர் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்த்து மோதினர். ஆனால் துரதிஷ்டவசமாக நன்றாக ஆடியும் 2-0 என்ற நிலையில் தோல்வி அடைந்தனர்.

இதன்மூலம் இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி நான்கு பதக்கங்களை பெற்றுக் கொடுத்துள்ளது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் ஒன்று, ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஒன்று, மகளிர் இரட்டையர் பிரிவில் ஒன்று, மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒன்று என நான்கு பதக்கங்கள் இந்தியாவிற்கு பெற்றுக்கொடுத்துள்ளது ஸ்குவாஷ் போட்டி. இதில் மூன்று வெண்கலமும் ஒரு வெள்ளிப் பதக்கமும் அடங்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See