Connect with us

Cricket

ஸ்பின் மலிங்காவாக மாறிய கேதர் ஜாதவ், மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங்க் செய்த தோனி,: நேற்றைய போட்டியின் ஹைலைட்ஸ் வீடியோ

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பந்துவீச்சில் தனது அதிரடியை காட்ட ஆயத்தமாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இடம் பிடித்துள்ள அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் இருவரும் ஆடும் லெவன் அணியில் இடம் பெற்றுள்ளனர். தற்போது, பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது.

இறுதியில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் சுருண்டது.

இதனால், இந்தியாவிற்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.ரோகித் சர்மா தனது அரை சதத்தினை பதிவு செய்து அசத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக ரோகித் சர்மா 52 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். பின்னர் அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 29 ஒவர்களிலேயே 164 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர்.

2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்து பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

 

https://www.youtube.com/watch?v=2y4tKBtxrxk

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See