Connect with us

Hockey

ஹாக்கியில் அதிரடி: இந்திய அணிக்கு பதக்கம் !!

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தற்போது இந்திய ஹாக்கி அணி மூலம் மேலும் ஒரு பதக்கத்தை தட்டியுள்ளது இந்தியா. இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது மூலம் இந்தியாவிற்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

சொல்லப்போனால் இந்த வெண்கலம் இந்தியாவிற்கு பெரிதல்ல. ஏனெனில் தற்போது ஆசியாவில் மிகப்பெரிய அணியான இந்திய அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தென் கொரியாவுடன் காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இந்திய ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது. பின்னர் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தானுடன் இன்று மோதி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வென்றது இந்திய அணி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See