Connect with us

Hockey

ஹாக்கியில் கொரியாவிடம் ஜஸ்ட் மிஸ்: அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று லீக் சுற்றில் கொரியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அனி 5-3 என்ற என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது இந்தியா.

இந்தோனேஷியாவில், 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஆண்களுக்கான ஹாக்கி ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பில் ருபிந்தர்பால் சிங் முதல் கோலடித்தார். தொடர்ந்து அசத்திய இந்தியாவுக்கு 5வது நிமிடத்தில் சிங்லன்சனா சிங், ஒரு கோல் அடித்தார். பின், 16வது நிமிடத்தில் இந்திய வீரர் லலித் குமார் உபத்யாய், தன்பங்கிற்கு ஒரு கோலடித்து கைகொடுத்தார். முதல் 30 நிமிட முடிவில் இந்திய அணி 3–0 என முன்னிலை வகித்திருந்தது.

இந்நிலையில் எழுச்சி கண்ட தென் கொரியாவுக்கு 33வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் மான்ஜி ஜங் ஒரு கோலடித்தார். பின், 35வது நிமிடத்தில் மான்ஜி ஜங், மீண்டும் ஒரு கோலடித்தார். இதற்கு இந்தியாவின் மன்பிரீத் சிங் (49வது நிமிடம்), ஆகாஷ்தீப் சிங் (56வது) தலா ஒரு கோலடித்து பதிலடி தந்தனர்.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5–3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்தோனேஷியா, ஹாங்காங், ஜப்பான் அணிகளை வீழ்த்திய இந்தியா, தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.

நாளை நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See