Connect with us

Cricket

ஹெய்டன் உங்கள் நெற்றியில் இருப்பது தமிழகத்தில் உள்ள கடற்கரையின் வரைபடம்தானே…!காயத்தில் இருந்த ஹெய்டனை கலாய்த்த முன்னாள் வீரர்

மேத்யூ ஹெய்டன் உங்கள் நெற்றியில் இருப்பது தமிழகத்தில் உள்ள கடற்கரையின் வரைபடம்தானே என்று  தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேத்யூ ஹெய்டன் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.இவர் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ஆவார் .கடந்த 2009 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அதேபோல் இவர் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2010 ஆம் ஆண்டு வரை விளையாடினார்.பின்னர் அவர் 2012 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஜாண்டி

தற்போது அவர் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளராக உள்ளார். இந்நிலையில் மேத்யூ ஹெய்டன் ஆஸ்திரேலிய தீவு ஒன்றில் ஃசர்ஃபிங் விளையாட்டின் போது விபத்து விபத்து காரணமாக காயமடைந்துள்ளார்.அவருக்கு முதுகெலும்பு, கழுத்தெலும்பில் முறிவு ஏற்பட்டு மேத்யூ ஹெய்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மேத்யூ ஹெய்டன் தனது காயத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.இந்த பதிவிற்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் கமெண்ட் செய்துள்ளார்.அந்த கமெண்டில் மேத்யூ ஹெய்டன் உங்கள் நெற்றியில் இருப்பது தமிழகத்தில் உள்ள கடற்கரையின் வரைபடம்தானே. உங்களின் ஈடுபாட்டைப் பாராட்டுகிறேன். எங்களைப் போன்று லேசான  மனம் படைத்தவர்கள் எங்கள் பாசத்தை டாட்டூவாக வரைந்து மட்டுமே காட்டுவோம் என்று  பதிவிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See