Connect with us

Football

1 கோல், 3 அசிஸ்ட்.. நெய்மார் மாயாஜாலத்தால் பிரேசில் அணி இமாலய வெற்றி!!!

ஐரோப்பிய சர்வதேச கால்பந்து அணிகள் மோதும் நேஷனல் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நட்பு ரீதியான போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் பிரேசில் அணி எல் சாவதோர் அணியை எதிர்கொண்டது.

பலம் வாய்ந்த பிரேசில் அணி முன்னால் சாவதோர் அணி கத்துக்குட்டி அனி என்றாலும், ஓரளவுக்கு தாக்குப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துவக்கத்தில் இருந்தே பிரேசில் காலடியிலேயே இருந்தது எல் சாவதோர் அணி.

பிரேசில் அணியின் கேப்டன் நெய்மார் ஒரு கோல் 3 அசிஸ்ட் செய்து அசத்தினார்.

4வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நெய்மார் நேர்த்தியாக கோல் ஆக்கினார். அதன் பிறகு அறிமுக வீரர் ரிச்சர்லீசன் 16வது நிமிடத்திலும், பிலிப்பே கவுட்டின்ஹோ 30வது நிமிடத்திலும் கோல் அடிக்க முதல் பாதியில் 3-0 என இருந்தது பிரேசில் அணி.

இரண்டாவது பாதியில் 50வது நிமிடத்தில் ரிச்சர்லிசன் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 90வது நிமிடத்தில் மர்கின்ஹோ ஒரு கோல் அடிக்க இறுதியில் பிரேசில் அணி 5-0 என வென்று அசத்தியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See