Connect with us

Cricket

10 ரன்னிற்கு 8 விக்கெட்!! இந்திய பந்து வீச்சாளர் சாதனை!!

இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ராஜஸ்தான் – ஜார்க்கண்ட் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் ஒன்பது ஓவர் வரை விக்கெட் இழக்கவில்லை. 10-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நதீம் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் கவுதம் என்ற தொடக்க வீரரை 17 ரன்னில் வீழ்த்தினார். 14-வது ஓவரின் கடைசி பந்தில் லம்பா என்ற மற்றொரு தொடக்க வீரரை 20 ரன்னில் வீழ்த்தினார்.

அதன்பின் தொடர்ந்து விக்கெட்டுக்களை அள்ளிக்கொண்டே இருந்தார். தொடர்ச்சியாக 10 ஓவர்கள் வீசிய நதீம் 4 மெய்டன் ஓவர்களுடன் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

இவரது பந்து வீச்சால் ராஜஸ்தான் 28.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 73 ரன்னில் சுருண்டது. பின்னர் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜார்க்கண்ட் 14.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இழக்கை எட்டியது.

10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் லிஸ்ட் ‘ஏ’ போட்டியில் குறைந்த ரன்கள் கொடுத்து அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ராகுல் சங்வி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.வ்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See