Connect with us

Cricket

10 விக்கெட் வித்யாசத்தில் வெஸ்ட் இண்டீசை பந்தாடி இந்தியா அபாரம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தி உமேஷ் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் அந்த அணி 311 ரன்களும், இந்திய அணி 367 ரன்களும் எடுத்திருந்தன. இந்திய அணியின் ரஹானே 80 ரன்களும், ரிஷப் பாந்த் 92 ரன்களும், பிரித்திவி ஷா 70 ரன்களும் எடுத்திருந்தனர்.

இரண்டாவது இன்னிங்சை தொடக்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்துவீச்சாளர்களால் நிலை குலைந்தது. 47 ஓவர்களில் அந்த அணி 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் 5 வீரர்கள் மட்டுமே இரண்டு இலக்க ரன்களை எடுத்தனர். மூன்று வீரர்கள் டக் அவுட் ஆகினர். அதிகபட்சமாக சுனில் அம்ரிஸ் 38 ரன்களை எடுத்திருந்தார்.

இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட் எடுத்திருந்த அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டை எடுத்துள்ளார். 10 விக்கெட் எடுத்த 8-வது இந்திய வீரர் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார். மேலும், இந்திய மண்ணில் 10 விக்கெட் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கி மிக எளிதாக வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See