Connect with us

Cricket

18 வயதில் சதம், அதிரடி காட்டும் பிரிதிவ் ஷா!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளை வரை, இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கே.எல்.ராகுலும் அறிமுக வீரர் பிருத்வி ஷாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கே.எல்.ராகுல் எல்பிடபிள்யூ ஆனார். அவர் ரன் கணக் கைத் தொடங்கும் முன்பே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து பிருத்வியுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் வந்த பந்துகளை அடித்து ஆடி வருகின்றனர். 19.5 ஓவர்களில் இந்திய அணி நூறு ரன்களை கடந்தது. பிருத்வி ஷா, ஒரு நாள் போட்டிகளில் ஆடுவது போல அதிரடியாக ஆடி வருகிறார். அவர் தனது 56 வது பந்தில் அரை சதத்தைக் கடந்தார்.

உணவு இடைவேளை வரை, இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. பிருத்வி ஷா, 74 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களுடன் சதத்தை நோக்கி ஆடிவருகிறார். புஜாரா 74 பந்துகளில் 56 ரன்களும் எடுத்து விளையாடி வருகிறார். தற்போது 107 பந்துகளுக்கு 105 ரன்கள் அடித்து மாஸ் காட்டி வருகிறார் பிரிதிவ் ஷா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See