Connect with us

Cricket

36 வயது பாலிவுட் நடிகையுடன் 56 வயது இந்திய கோச் ரவி சாஸ்திரி காதல்?

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் பாலிவுட் நடிகைகளுக்கும் உள்ள காதல் கதை ஒரு ஓயாத அலையாக உள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாகவே கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் நடிகைகளும் காதலித்து வருவது ஒரு இயல்பான செய்தியாகவே உள்ளது. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராகும் பாலிவுட் நடிகை நிர்மத் கவுருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரிக்கு 56 வயதாகிறது பாலிவுட் நடிகை நிர்மத் கவுருக்கு தற்போது 36 வயது மட்டுமே ஆகிறது. இருவருக்கும் வயது வித்தியாசம் கிட்டத்தட்ட 20 ஆகும். இரவரும் கடந்த இரண்டு வருடங்களாக டேட்டிங் செய்து வருவதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜெர்மனை சேர்ந்த கார் நிறுவனம் ஒன்று ரவி சாஸ்திரி மற்றும் நிர்மத் கவுர் ஆகிய இருவரையும் விளம்பரத் தூதர்களாக நியமித்து இந்தியாவில் பிரபலப்படுத்தி வந்துள்ளது. இந்த நேரத்தில் இருவரும் பேசி பழகி தற்போது வரை டேட்டிங் செய்துள்ளதாக செய்து வருவதாக செய்திகள் வந்துள்ளது.

மேலும் இந்த செய்தி இந்த டேட்டிங் செய்தி யாருக்கும் தெரியா வண்ணம் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதாக இருவரும் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் தற்போது செய்திகள் வெளியாகி விட்டது.

நிர்மத் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏர்லிப்ட் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தில் நடித்தார். அதன் பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அதே நேரத்தில் ரவி சாஸ்திரி தற்போது இங்கிலாந்தில் இந்திய அணியுடன் உள்ளார்.

ரவி சாஸ்திரிக்கு பாலிவுட் நடிகைகளுடன் சேர்ந்து கிசுகிசுக்கள் வருவது இது முதல் முறை அல்ல. அவர் வீரராக இருந்த காலகட்டத்தில் அவர் மீது பல்வேறு கிசுகிசுக்கள் வந்து சேர்ந்துள்ளது. சைப் அலிகானின் மனைவி அம்ரித்சிங்குடன் இது தொடர்பில் இருந்ததாக  அப்போதைய செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See