Connect with us

Cricket

4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான 5 சரியான காரணங்கள்!

இந்திய அணியின் மீண்டும் மீண்டும் பேட்டிங்கில் சொதப்பிய தான் தோல்வியை தழுவி வருகிறது. சென்றமுறை இங்கிலாந்து வந்திருந்தபோது பேட்டிங்கில் மட்டுமே பலமாக இருந்த இந்திய அணி இந்த முறை பேட்டிங்கில் மிகவும் பலவீனமாக உள்ளது. பந்துவீச்சாளர்கள் மட்டுமே பணியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிகயில் தோல்வி அடைந்துள்ளது. அதாவது 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி இந்திய ரசிகர்களையும் ஏமாற்றியுள்ளது.

தற்போது இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த அதற்கான 5 சரியான காரணத்தை பார்ப்போம்…

1.ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா

ஒரு ஆல்-ரவுண்டராக இருப்பவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சரியாக செயல்பட வேண்டும் இல்லை எனில், அந்த இடத்தை ஒரு பேட்ஸ்மேனுக்கு அல்லது ஸ்பெஷல் பந்துவீச்சாளருக்கு கொடுக்கலாம். இந்த இரண்டையுமே செய்யாமல் அந்த இடத்தை அடைத்துக்கொண்டு இந்திய அணியை பின்வாங்க வைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

2.இந்தியாவின் தொடக்க வீரர்கள் சொதப்பல்

வழக்கம்போல இந்தப் போட்டியிலும் இந்தியாவின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மிகவும் பலவீனமாக காட்சியளித்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இலவசமாகக் கொடுத்து வெளியேறினார். இதன் மூலம் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைக்காததால் பின்வரிசை ஆட்டக்காரர்கள் மீது பிரஷர் அதிகமானது.

3.இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் குர்ரன்

இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து அணி 150 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விட்டது. ஆனால் அடுத்து வந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் சாம் குர்ரன்  பொறுமையாக ஆடி அந்த அணியை கரை சேர்த்தார். இதன் மூலம் மிகவும் பின்தங்கியிருந்த அந்த அணி ஓரளவிற்கு சேர்த்து ஆட்டத்தை தன் பக்கம் திருப்பியது.

4.அஸ்வின் வீசிய சுழற்பந்து வீச்சுகள் எடுபடாமை

இந்த போட்டியில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே இருந்த பெரிய வித்தியாசம் சுழற்பந்து வீச்சு தான். அஸ்வின் மற்றும் மொயீன் அலி ஒரே மைதானத்தில்தான் விளையாடுகின்றனர். மொயின் அலி அதே ஆப் ஸ்பின்னர் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால்  அஸ்வினால் பெரிதாக ஏதும் சாதிக்க முடியவில்லை.  இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர் மியின் அலி மொத்தம் 9 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தம் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினா.ர் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் மாக இருந்தாலும், அவினால் அந்த இடத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை

5.பின்வரிசை பேட்ஸ்மேன்கள் வித்யாசம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்த போட்டியில் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் பெரும் வித்தியாசத்தை காட்டினர். இந்தியாவின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா, மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் பெரிதாக ரன்கள் சேர்க்க வில்லை. ஆனால், இங்கிலாந்து அணி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன் ஆகியோர் குறிப்பிட்ட அளவு ரன்கள் அடித்து பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தி இந்திய அணியை போட்டியை விட்டு வெளியே தள்ளினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See