Connect with us

Cricket

4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 – ஆஸ்திரேலியத் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு

இந்திய அணி 2019, 50-ஓவர் உலக கோப்பை தொடருக்கு செல்லும் முன் சரியான விகிதத்திலும் ,சரியான மனநிலையையும் இருக்க படு வேகமாக தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக இந்த வருடத்தின் இறுதியில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.

இந்த சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த முறை இந்திய அணிக்கு அனைத்து தொடர்களையும் வெல்ல வாய்ப்பு உள்ளது. சொல்லப்போனால் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய ஆஸ்திரேலிய அணியின் தூண்கள் அந்த அணியில் இடம்பெற மாட்டார்கள் இதனால் அந்த அணி படு மோசமாக தொடர்ந்து வருகிறது.

வரும் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி டி 20, ஒரு நாள், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது.
2018-19 சுற்றுப் பயணம் என அழைக்கப்படும் இது வரும் கோடைக்காலத்தில் இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி தயாராக உதவும். அதனை தாண்டிய நற்செய்தி என்னவென்றால், பல மாதமாக ஓய்வில் இருக்கும் தோனியை இந்த முறை அவரது ரசிகர்கள் மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கும் ப்ளூ உடையில் பார்க்கலாம்.


3 டி 20 ஆட்டங்கள், 4 டெஸ்ட்கள், 3 ஒருநாள் ஆட்டங்கள் இச்சுற்றுப்பயணத்தில் இடம் பெறுகின்றன. கடந்த 2014-15-இல் ஆஸி. சுற்றுப்பயணத்தில் 2-0 என தொடரை இந்தியா இழந்தது. 2015-16-இல் ஒருநாள், டி 20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்றது. டி 20 தொடரை 3-0 என இந்தியாவும், ஒரு நாள் தொடரை 4-1 என ஆஸி.யும் வென்றன.

 2018-19 சுற்றுப்பயண விவரம்

 டி 20 தொடர்
நவம்பர் 21: முதல் டி 20-பிரிஸ்பேன்,.
23; இரண்டாவது டி 20, மெல்போர்ன்,.
25: மூன்றாவது டி 20, சிட்னி.

 டெஸ்ட் ஆட்டங்கள்
முதல் டெஸ்ட்: அடிலெய்ட், டிசம்பர் 6.
இரண்டாவது டெஸ்ட்; பெர்த், டிசம்பர் 14.
மூன்றாவது டெஸ்ட்: மெல்போர்ன், டிசம்பர் 26.
நான்காவது டெஸ்ட்: சிட்னி, 2019, ஜனவரி 3.

 ஒரு நாள் ஆட்டங்கள்
முதல் ஆட்டம்: சிட்னி, 2019, ஜனவரி 12.
2-வது ஆட்டம்: அடிலெய்ட், 2019, ஜனவரி 15.
3-வது ஆட்டம்: மெல்போர்ன், 2019, ஜனவரி 18.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See