Connect with us

Athletics

‘ 400மீ ஹர்டில்ஸ்’ – வெள்ளி வென்ற தங்கத் தமிழன் தருன்

ஆசிய விளையாட்டு தடகளத்தில் 400 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் 21 வயது தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்தில், இந்தியாவின் தமிழக வீரர்கள் அவினாசியை சேர்ந்த தருண் அய்யாச்சாமி, சக்குடியை சேர்ந்த சந்தோஷ் குமார் தமிழரசன் பங்கேற்றனர்.

போட்டி துவங்கியதும் இருவரும் பின் தங்கி வந்தனர். நான்காவதாக வந்து கொண்டிருந்த தருண் அய்யாச்சாமி, கடைசி நேரத்தில் வேகம் எடுக்க இரண்டாவது இடம் பிடித்தார். 48.46 வினாடி நேரத்தில் வந்த இவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. தவிர இது இவரது சிறந்த ஓட்டமாக அமைந்தது.

2016 தெற்காசிய ஓட்டத்தில் தனிநபர், ரிலே பிரிவில் தருண் தங்கம் வென்று இருந்தார். 2016ல் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 18 மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்ல் வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்தார். தற்போது இது நிறைவேறியது.

மற்றொரு இந்திய வீரர் சந்தோஷ் குமார் (49.66) ஐந்தாவது இடம் பிடித்தார். பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டம் பைனல் நேற்று நடந்தது. இந்தியாவின் ஜுவானா மர்மு, அன்னு ராகவன் களமிறங்கினர். இதில் அனு (56.92 வினாடி) நான்காவது இடம் பெற்று பதக்க வாய்ப்பை இழந்தார். ஜுவானா ஐந்தாவது இடம் (57.48) பிடித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See