Connect with us

Cricket

5வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தால் 18 லட்சம் பரிசு: வீரர்களுக்கு ஜாக்பாட்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது. இந்த போட்டியில் சதம் அடிக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு 18 லட்சம் பரிசு தருவதாக அந்த நாட்டின் பிரபல பாடகர் ஒருவர் தெரிவித்துள்ளார் .மேலும் 5 விக்கெட் அவர்களுக்கும் இந்த பரிசு கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார் அவர்.

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் 5 விக்கெட்டுகள் அல்லது சதம் அடித்தால் ரூ.18 லட்சம்(20ஆயிரம் பவுண்ட்) பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் இசைப் பாடகர் மிக் ஜாக்கர் என்பவர் இந்த பரிசுத் தொகையை அறிவித்துள்ளார். மிகப்பெரிய பாப்பாடகரான மிக் ஜாக்கர் நீண்டகாலமாக கிரிக்கெட் விளையாட்டோடு தொடர்புடையவர்.

உலகளவில் இங்கிலாந்து அணி மோதும் போட்டிகளில் எல்லாம் மிக் ஜாக்கர் பங்கேற்று தனது வருகையை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆஷஸ் தொடரின் போதும், உலகக்கோப்பைப் போட்டியின் போதும் மிக் ஜாக்கர் பங்கேற்று பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். கடந்த மே மாதம் பாகிஸ்தான், அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போதும் பாடல்பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி நாளை ஓவலில் நடக்கிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிட்டது. இந்நிலையில் நாளை 5-வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா கவுரவுத்துக்காக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால், இதிலும் இங்கிலாந்து வீரர்களை குஷிப்படுத்தும், உற்சாகப்படுத்தும் நோக்கில் பரிசுகளை பாடகர் அறிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See