Connect with us

Cricket

5வது டெஸ்ட் 3வது நாள் உணவு இடைவேளை நிலைமை: அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த ஹனுமா விஹாரி – இலக்கை நோக்கி மெதுவாக முன்னேறும் இந்தியா!!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹனுமா விகாரி முதலாவது அரைசதத்தை அடித்துள்ளார். உணவு இடவேளையின் போது இந்திய அணி 240/7 என்ற நிலையில் இருக்கிறது. இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து அணி 122 ஓவர்களில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர் 89,குக் 71 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 4, பூம்ரா மற்றும் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஷிகர் தவான் ப்ராட் பந்து வீச்சில் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.இதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ராகுல் இங்கிலாந்து வீரர் சாம் குர்ரான் பந்துவீச்சில் விக்கெட்டை பறி கொடுத்தார்.அதேபோல் புஜாரா 37 ,ரகானே 0 , விராட் 49,பண்ட் 5 ரன்களிலும் விக்கெட்டை பறி கொடுத்தனர்.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் புதிதாக அறிமுகமான ஹனுமா விகாரி அரைசதம் அடித்துள்ளார்.இது அவருக்கு முதல் அரை சதம் ஆகும் .இந்திய அணி 71 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்துள்ளது. பின்னே 124 பந்துகளுக்கு 56 ரன்கள் எடுத்தபோது மொயின் அலி பந்தில் கீப்பர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See