Connect with us

Cricket

6 பந்தில் 4 விக்கெட்டுகளை இழந்து பங்கமான பாகிஸ்தான்: ஆஸ்திரேலிய அபாரம்!

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் பகர் சமான், மிர் ஹம்சா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

இந்த போட்டியில் 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வீசினார். இந்த ஓவரில் பாகிஸ்தானுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஓவரின் ஐந்தாவது பந்தில் அசார் அலி 15 ரன்கள் எடுத்த நிலையில் லயனிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஹரிஸ் சோஹைல் ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேறினார்.

அதோடு மட்டுமல்லாமல் 22-வது ஓவரின் 2-வது பந்தில் ஆசாத் ஷபிக் ரன்ஏதும் எடுக்காமலும், 4-வது பந்தில் பாபர் ஆசம் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். நாதன் லயன் 6 பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த பாகிஸ்தான் 57 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See