Connect with us

Cricket

#கொரோனா அச்சம்: தனிமைப்படுத்தப்பட்ட தென்ஆப்பிரிக்கா வீரர்கள்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்கா அணி, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் முதல் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், இந்த தொடரை முற்றிலுமாக பிசிசிஐ ரத்து செய்தது. இதனைதொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள், தங்களின் தாயகம் திரும்பினர். இந்நிலையில், நாடு திரும்பிய தென்னாபிரிக்கா வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தியாவிலிருந்து வந்த அனைத்து வீரர்களும் தன்னைதானே 14 நாட்களாக தனிமைப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் எனவும், யாருக்காவது கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See