Connect with us

Cricket

பிருத்வி ஷா அதிரடி அரை சதம்.. சூப்பர் கிங்ஸ் அணிக்கு 176 ரன்கள் இலக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 176 ரன்களை இலக்காக வைத்தது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

ஐபிஎல் தொடர் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் ஏழாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராக பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் பொறுமையாக ஆடிவந்தனர். இதில் அபாரமாக விளையாடிய பிருத்வி ஷா 50 ரன்கள் எடுத்த நிலையில், இவர்களின் கூட்டணியில் டெல்லி அணி 94 ரன்கள் எடுத்தது. அப்பொழுது டெல்லி அணியின் பேஸ்மன் ஷிகர் தவான், 35 ரன்கள் அடித்து வெளியேறினார். அவரைதொடர்ந்து அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் களமிறங்கினார்.

64 ரன்களில் பிருத்வி ஷா வெளியேற, ரிஷப் பந்த் களமிறங்கினார். பந்த் மற்றும் ஐயர் கூட்டணியில் டெல்லி அணியின் ஸ்கொர் உயர, 26 ரங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறினார். இறுதியாக டெல்லி அணி, 20 ஒவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See