Connect with us

Cricket

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா ஜாதவ்? சென்னை அணி பேட்டிங் தேர்வு!

ஐபிஎல் தொடரின் இன்று பகல் – இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் 34 ஆம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

மேலும், இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பியூஸ் சாவ்லாக்கு பதிலாக கேதார் ஜாதவ் விளையாடவுள்ளார். இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றிற்கு இந்த போட்டியில் முற்றுப்புள்ள வைப்பாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னை அணி வீரர்கள்:

டு பிளெசிஸ், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், கரண் சர்மா.

டெல்லி அணி வீரர்கள்:

பிருத்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன் ), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், அஸ்வின், துஷார் தேஷ்பாண்டே, ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் இடம்பெற்றனர்.

இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See