Connect with us

Cricket

“தோனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை”- சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி. இவர் 2019ல் நடந்த உலகக்கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடினார். அதனைதொடர்ந்து, எந்தொரு போட்டிகளிலும் அவர் கலந்துகோள்ளவில்லை. இதனைதொடர்ந்து, தற்பொழுது நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை அணி சார்பாக அவர் விளையாடவுள்ளார். மேலும், அதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐபிஎல் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர் பயிற்சியை நிறுத்தி, வீடு திரும்பினார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேவாக், தோனி ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என கூறினார்.

மேலும் இதுகுறித்து சேவாக் கூறியதாவது, தோனியை ஒதுக்கிவிட்டு, மாற்று வீரரை அடையாளம் காணும் பணியை ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், தோனியை மறுபிரவேசம் செய்வது மிக கடினம் எனவும் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See