Connect with us

Cricket

“என்ன ம*** பந்து இது?” – போட்டியின்போது பவுலரை தமிழில் திட்டிய தினேஷ் கார்த்திக்!

நேற்று நடந்த 32 ஆம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 16.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்தது.

மேலும் தினேஷ் கார்த்திக், தனது கேப்டன்ஷிப் பதவியை இயோன் மோர்கனுக்கு குடுத்து, பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கவுள்ளதாக கூறினார். ஆயினும் 4 ரன்கள் மட்டுமே அடித்தார். தினேஷ் கார்த்திக், மைதானத்தில் கோபத்தை காட்ட மாட்டார்.

பொதுவாக தினேஷ் கார்த்திக், தமிழக வீரர்களிடம் அவர் எப்போதும் தமிழிலே பேசுவது வழக்கம். அதேபோல போட்டியின்போது சக்ரவர்த்தியிடம் தமிழில் பேசியது, இணையத்தில் வைரலாகியது. ஆனால் நேற்று நடந்த போட்டியில் அவர் பேசிய வார்த்தை, தற்பொழுது வைரலாகி வருகிறது.

இந்தநிலையில் நேற்று நடந்த மும்பை அணிக்கெதிரான போட்டியில் 14 வது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். அப்பொழுது தினேஷ் கார்த்திக், தமிழில் அறிவுரை வழங்கினார். அதனை கேட்டு சக்ரவர்த்தி விளையாடினார். அந்த ஓவரின் கடைசி பந்தை வெளியே போடும்படி தினேஷ் கார்த்திக் கூறினார். ஆனால் சக்கரவர்த்தி, அதற்கு மாறாக பந்தை தூக்கி உள்ளே வீசினார்.

இதனால் கோபம் அடைந்த தினேஷ் கார்த்திக் “என்ன ம*** பந்து இது” என தமிழில் கெட்ட வார்த்தையால் வருண் சக்ரவர்த்தியை பார்த்து திட்டினார். எப்போதும் தினேஷ் கார்திக்கை அமைதியாக பார்த்த நிலையில், நேற்று பேசியது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதுகுறித்த விடியோக்கள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See