Connect with us

Football

ரொனால்டோ எந்த அணியில் இருக்கிறாரோ அந்த அணி தான் எனக்கு பிடிக்கும் – விராட்

ஐபிஎல் போட்டி கொரோனா ஊரடங்கில் இருக்கும் மக்களுக்கு சற்று உற்சாக குளிர்க்காற்றை வீசிவருகிறது. முதல் சுற்று முடிந்து இரண்டாம் சுற்று நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முன்பைவிட பிரகாசித்து வருகிறது.

இந்நிலையில், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஒரு தீவிரமான கால்பந்து ரசிகர். அவர் நேற்று  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மான்செஸ்டர் சிட்டி மேலாளர் பெப் கார்டியோலா உடன் நேரலையில் உரையாடினார். அதில் கால்பந்து மீதான தனது காதலை பகிர்ந்துகொண்டார்.

அப்போது எந்த அணியை நீங்கள் ஆதரிக்கிறீங்கள் என்று கேட்டபோது, இதற்கு பதிலளித்த கோலி, தற்போது ஜுவென்டஸ் அணியை ஆதரிக்கிறேன். ஏனெனில், நான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகன். இதனால் அவர் விளையாடும் ஒவ்வொரு கிளப்பையும் நான் ஆதரிக்கிறேன். அவர் என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறார்.

மேலும், நான் இப்போது போர்ச்சுகல் விளையாட்டைப் பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால், அவர்கள் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் விளையாடுகிறார்கள். இதனால் நான் அவர்களை விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்.  உண்மையான திறன் மற்றும் தாக்கத்தின் அடிப்படையில், பிரான்ஸ் மிகவும் வலுவானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

In conversation with @Pepteam, all thanks to @PumaIndia 🙌🏼

A post shared by Virat Kohli (@virat.kohli) on

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See