Connect with us

Cricket

#SRHvKKR: சூப்பர் ஓவரில் முதல் முறையாக வெற்றிபெற்ற கொல்கத்தா அணி!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பகல் -இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.

அபுதாபியில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி, கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் அடித்து போட்டியை சமனாக்கியது. இந்தநிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இது 3 ஆம் சூப்பர் ஓவர் போட்டியாகும். அதுமட்டுமின்றி, கொல்கத்தா அணிக்கு இது நான்காம் சூப்பர் ஓவர் போட்டியாகும். தொடர்ந்து மூன்று சூப்பர் ஓவர் போட்டிகளில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவிய நிலையில், இன்று வெற்றிபெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – ஜானி பைர்ஸ்டோவ் களமிறங்கினார்கள். பெர்குசன் பந்துவீச, அவரின் பந்துவீச்சை தாங்கமுடியாமல் டக் அவுட் ஆகினார். இரண்டாம் பந்தில் சமத் 2 ரன்கள் அடிக்க, அடுத்த பந்திலே அவரும் வெளியேறினார். 3 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

முதல் பந்து டாட் ஆக, அடுத்த பந்தில் மோர்கன் ஒரு ரன் அடித்தார். மூன்றாம் பந்தும் டாட் ஆன நிலையில், அடுத்த பந்தில் ஹைதராபாத் அணியில் மிஸ்-பில்டிங்க் ஆக, 2 ரன்கள் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இது கொல்கத்தா அணிக்கு முதல் சூப்பர் ஓவர் வெற்றியாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See