Connect with us

Cricket

3 ரன்கள் மட்டுமே எடுத்த தோனி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரண்டாவதாக நடைபெற்ற 34-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரண், டு பிளெசிஸ் களமிறங்கிய நிலையில், ஒரு ரன் கூட எடுக்காமல் சாம் கரண் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து வாட்சன் களமிறங்கினார். சிறப்பாக ஆடிய அவர் 36 ரன்களில் வெளியேற, அதிரடியாக விளையாடி வந்த டு பிளெசிஸ் அரைசதம் அடித்து 58 ரன்கள் குவித்தார்.

அவரையடுத்து களமிறங்கிய தல தோனி 3 ரன்னில் வெளியேற, அம்பதி ராயுடு – ஜடேஜா கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக ரவீந்திர ஜடேஜா 33*, அம்பதி ராயுடு 45* ரன்களுடன், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தனர். 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரராக ப்ரித்வி ஷா – தவான் களமிறங்கினார்கள். முதல் ஓவரில் 0 ரன்களில் ப்ரித்வி ஷா வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய ரஹானே 6 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் 23 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்க, 24 ரன்களில் மார்கஸ் ஸ்டோனிஸ் வெளியேறினார்.

அதனைதொடர்ந்து தவான் அரைசதம் விலாச, 4 ரன்களில் அலெக்ஸ் கேரி மைதானத்தை விட்டு வெளியேறினார். இறுதியாக தவான் சத்தம் விலாச, ஜடேஜாவின் இறுதி ஓவரில் மூன்று சிக்ஸர் அடித்து அக்ஸர் படேல் அணியை வெற்றிபெற வைத்தார். 19.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

பந்துவீச்சை பொறுத்தளவில் சென்னை அணியில் தீபக் சஹர் 2 விக்கெட்களை வீழ்த்தினார். சாம் கரண் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். டெல்லி அணியில் நோர்ட்ஜ் 2 விக்கெட்களும், ரபடா மற்றும் தேஷ்பண்ட் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See