Connect with us

Cricket

#SRHvKKR: டாஸ் வென்ற ஹைதராபாத்.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் கொல்கத்தா!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பகல் -இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளது.

அபுதாபியில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தநிலையில், ஹாட்ரிக் தோல்வியில் இருந்து தப்பிக்க இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளதால், முதல் போட்டி சூடுபிடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆடும் வீரர்களின் விபரம்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், விஜய் சங்கர், அப்துல் சமத், ரஷீத் கான், சந்தீப் சர்மா, டி நடராஜன், பேசில் தம்பி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

ராகுல் திரிபாதி, சுப்மன் கில், நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), எயோன் மோர்கன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, குல்தீப் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்ரவர்த்தி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See