Connect with us

Cricket

மேட்ச் 36: சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டுமா பஞ்சாப்? கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பகல் -இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் இரண்டாம் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் – கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மும்பை மற்றும் பஞ்சாப் அணி, இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை அணி 14 போட்டிகளிக்கும், பஞ்சாப் அணி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி 8 போட்டிகள் விளையாடிய நிலையில், அதில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

8 போட்டிகள் ஆடிய பஞ்சாப் அணி, 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும், பிளே-ஆப்ஸ் சுற்றில் பஞ்சாப் அணி தகுதிபெற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும். இதனால் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See