Connect with us

Cricket

MIvKXIP: டாஸ் வென்று பேட்டிங் செய்ய காத்திருக்கும் மும்பை அணி!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பகல் -இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் இரண்டாம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்தநிலையில், பஞ்சாப் அணி தகுதிபெற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும். இதனால் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆடும் வீரர்களின் விபரம்:

மும்பை இந்தியன்ஸ் அணி:

கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், க்ளென் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டன், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்

கிங்ஸ் லவன் பஞ்சாப் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See