Connect with us

Cricket

ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடந்த பிருத்வி ஷா!

ஐபிஎல் தொடர் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் ஏழாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராக பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் பொறுமையாக ஆடிவந்தனர். இந்தநிலையில், இந்த போட்டியில் 23 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 1000 ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பிருத்வி ஷா இடம்பிடிக்கவுள்ள நிலையில், அரைசதம் விளாசி 64 ரன்கள் அடித்தார். இதனால் 1000 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்தார்.

தற்பொழுது 14 ஓவர் முடிவில் டெல்லி அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. களத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களுடனும், ரிஷப் பந்த் 3 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See