Connect with us

Cricket

வீணாதது தோனியின் நம்பிக்கை.. முதல் ஓவரிலே சாம் கரண் அவுட்! ரசிகர்கள் ஏமாற்றம்

ஐபிஎல் தொடரின் 34 ஆம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளெசிஸ் – சாம் கரண் களமிறங்கினார்கள்.

சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர், இதற்கு முன் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மாறியது. அந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சாம் கரண், அதிரடியாக ஆடி 31 ரன்கள் அடித்தார். அந்தவகையில் இன்றைய போட்டியில் முதலில் சாம் கரண் களமிறங்கிய நிலையில், தேஷ்பாண்டே வீசிய பந்தில் நோர்ட்ஜ் கையில் பந்தை குடுத்து வெளியேறினார்.

ஒரு ரன் கூட எடுக்காத நிலையில், சென்னை அணி முதல் விக்கெட்டை இழந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், டுபிளெசிஸ் – ஷேன் வாட்சன் பழையபடி கூட்டணி போட்டு ஆடினார்கள். ஷேன் வாட்சன் 36 ரன்கள் எடுத்து வெளியேற, டு பிளெசிஸ் 58 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் “தல தோனி” களமிறங்க, 3 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். இது, ரசிகர்களுக்கு பெரியளவில் ஏமாற்றத்தை தந்தது. இறுதியாக சென்னை அணி 179 ரன்கள் அடிக்க, 185 ரன்கள் அடித்து டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சாம் கரணின் ஓப்பனிங்கால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See