Connect with us

Cricket

ஹாட்ரிக் தோல்வியில் இருந்து தப்புமா? ஹைதராபாத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பகல் -இரவு என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது.

அபுதாபியில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதி – சுப்மன் கில் களமிறங்கினார்கள். இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.

23 ரன்களில் திரிபாதி வெளியேற, அவரையடுத்து நிதிஷ் ராணா மைதானத்தில் கால் பதித்தார். சிறப்பாக அடிவந்த சுப்மன் கில் 36 ரன்களில் வெளியேறிய நிலையில், அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் 9 ரன்களில் வெளியேறினார். அதன்பின் மோர்கன் – தினேஷ் கார்த்திக் கூட்டணி அதிரடியாக அடிவர, இறுதி ஓவரில் 16 ரன்கள் அடித்தனர்.

இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் டி நடராஜன் தலா 2 விக்கெட்களும், ரஷீத் கான், விஜய் சங்கர், பேசில் தம்பி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See