Connect with us

Cricket

10 வருட கேப்டன் பொருப்பில் இருந்து நீக்கம்: ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் தொடரும் சோகம்

இந்திய அணியில் இருந்து கிட்டத்தட்ட ஓரம்கட்டப்பட்ட கட்டப்பட்ட 31 வயதான சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கை மேலும் ஒரு சோகம் தாக்கியுள்ளது. கடந்த பத்து வருடமாக உத்தரபிரதேச அணியின் கேப்டனாக இருந்து வந்த  சுரேஷ் ரெய்னா அந்த பொறுப்பில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

சென்ற வருடம் ரஞ்சி கோப்பை தொடரில் சொற்ப ரன்கள் மட்டுமே அடித்ததால் இந்த முடிவிற்கு வந்துள்ளது. 10 போட்டிகளில் ஆடிய அவர் 105 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் வேறுவழியின்றி ரஞ்சிக்கோப்பை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது உத்தரபிரதேச அணி.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இந்திய அணியில் சரியாக இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார் ரெய்னா. அவர் தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட இந்த செய்தி அவரை மேலும் காயப்படுத்தியுள்லது. இதனால் சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்களும் கடினமான மனநிலையில் உள்ளனர். ரெய்னாவை நீக்கிவிட்டு அந்த அணியின் 25 வயதான அக்ஸ்தீப்நாத் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See