Connect with us

Cricket

சூழ்நிலை தோனிக்கு சரியாக அமையவில்லை- பிரயன் லாறா..!

ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டி நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 167 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 168 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் 10 ஓவர்களுக்கு பிறகு விக்கெட்டை இழந்து வந்த நிலையில் இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் இதைப்பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரயன் லாறா கூறியது ” கேப்டன் தோனி போட்டியை பினிஷ் செய்யவில்லை என்று கூறமுடியாது. இந்த சீசன் அவருக்கு ஏற்றவாறு சூழ்நிலையை ஏற்படுத்தவில்லை.

பிராவோ ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், நேற்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை, போட்டியில் மிகவும் சிறப்பாக ஜடேஜா விளையாடினார் என்றும் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See