Connect with us

Cricket

பாதியிலே வெளியேறிய பிராவோ.. டெத் ஓவரை வீசிய ஜடேஜா! காரணம் குறித்து விளக்கிய தல தோனி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 34 ஆம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் குவித்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

இறுதி ஓவரில் அதிரடி காட்டிய டெல்லி, 19.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நேற்று நடந்த போட்டியில் கேதார் ஜாதவ் இருந்தார். இந்தநிலையில், டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் ஆன பிராவோ, நேற்று இறுதி ஓவரை வீசவில்லை. அவருக்கு பதில் ஜடேஜா வீசினார். இதுகுறித்து போட்டி முடித்தபோது விளக்கமளித்தார்.

அப்பொழுது அணியில் தோல்வி குறித்து சில முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு கூறினார். பிராவோவிற்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் பாதியிலே அவர் வெளியேறினார். இதனால் டெத் ஓவரை யார் வீசுவார் என்ற குழப்பம் ஏற்பட்டது.

அதன்படி கரண் சர்மா அல்லது ஜடேஜா இடையே யாருக்கு டெத் ஓவரை குடுக்கலாம் என்ற குழப்பம் எழுந்தது. இறுதியாக ஷிகர் தவான் விக்கெட் எடுக்க ஜடேஜாவை அனுப்பியதாக கூறிய அவர், அது பலனளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See