Connect with us

Cricket

விமர்சனங்களுக்கு மத்தியில் சென்னை அணிக்காக மீண்டும் விளையாடிய ஜாதவ்.. காரணம் இதுதான்!

ஐபிஎல் தொடரில் அதிரடி அணியாக பெயர்பெற்றது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை காட்டி வந்த நிலையில், அணி மீது விமர்சனங்கள் பாய தொடங்கியது. மேலும், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கேதார் ஜாதவின் மோசமான ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியடைந்தது.

இதனைதொடர்ந்து அவர்மீது தொடர்ந்து விமர்சனங்கள் குவிந்து கொண்டே வந்தது. அதுமட்டுமின்றி, அவரை ரசிகர்கள் பலர் அணியிலிருந்து நீக்குமாறும் கோரிக்கை வைத்தனர். அதனைதொடர்ந்து அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தநிலையில், நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பியூஸ் சாவ்லாக்கு பதிலாக கேதார் ஜாதவ் களமிறங்கினார்.

இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றிற்கு இந்த போட்டியில் முற்றுப்புள்ள வைப்பாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அவருக்கு பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை.  சென்னை அணியில் சாவ்லா இருந்தால் 7 பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். இதன்காரணமாக மிடில் ஆர்டர் பேட்டிங்கில் மோசமாக இருக்கும். ஏற்கனவே ரெய்னா இல்லாதது, அணிக்கு பலவீனமாக இருக்கிறது.

இதனால் சென்னை அணியில் பேட்டிங் ஆர்டரை வலிமைப்படுத்த கேதார் ஜாதவ் இன்று அணியில் சேர்க்கப்பட்டார். ஜாதவ் எந்த சோர்வுமின்றி நிதானமாக ஆடி, மீண்டும் பார்மிற்கு திரும்புவார். அதுமட்டுமின்றி, 6-7 ஆர்டரில் ஜெகதீசனைஇறக்க முடியாது. ஆனால் 6 ஆம் இடத்தில் ஜாதவ் ஆடிய அனுபவம் உண்டு. இதனால் ஜெகதீசனுக்கு பதில் ஜாதவ் விளையாடினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See