Connect with us

Cricket

இன்று இந்த சாதனையை செய்துவிடுவாரா டேவிட் வார்னர்…!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நடப்பாண்டு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 175 ரன்களை அடித்துள்ளார். மேலும் மொத்தமாக இதுவரை தனது ஐபிஎல் கேரியரில் 131 போட்டிகள் விளையாடி 4,888 ரன்கள் அடித்துள்ளார். இதில் 402 பவுண்டரிகள் மற்றும் 186 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

இந்த நிலையில் இன்று ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதுகின்றனர்.

இந்த போட்டியில் டேவிட் வார்னர் 54 ரன்கள் அடித்தால் ஹைதராபாத் அணிக்காக அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 3500 ஆகிவிடும் இதனால் ரசிகர்கள் அனைவரும் ஹைதராபாத் அணிக்காக வார்னர் 3,500 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை இந்த சீசன் தொடரில் 5 போட்டிகள் விளையாடி 2 போட்டிகள் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See