அட நம்ம ரோஹித் சர்மா என்ன செய்கிறார் பாருங்கள்.!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்கவீரராக களமிறங்குபவர், ரோஹித் சர்மா. இவர் இந்திய அணி சார்பாக பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், டி-20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கும் திறமை ரோஹித் ஒருவருக்கே உள்ளது என டுவைன் பிராவோ கூறியிருந்தார். உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவி வருகின்ற நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது, இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை தனது சமூகவலைதள பக்கங்களில் காட்டி வருகிறார்கள்.

நேற்று கூட இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி காலால் 180 டிகிரியில் குதித்துக்கொண்டே திரும்பி, மற்றொரு காலை ஊன்றினார். மிக கடினமான பயிற்சியை செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார், அதை போல் ரோஹித் சர்மா தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

That’s my little boy Chahal when he is fielding (jumping all around )😆 @yuzi_chahal23

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

விராட்கோலியின் புதிய முயற்ச்சி.. நல்லா இருக்கு..!

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவி வருகின்ற நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது, இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை தனது சமூகவலைதள பக்கங்களில் காட்டி வருகிறார்கள்,

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தற்பொழுது பொழுதுபோக்கிற்காக உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார், மேலும் விராட்கோலியை “பிட்னஸ் கிங்” என அவரது ரசிகர்கள் அழைத்துவருகின்றனர். மேலும் நேற்று அவர் 180 லாண்டிங் வர்க் அவுட்டை செய்து அசத்தினார். அதனை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார்.

இந்த நிலையில் அதை போல் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருகாலை ஊன்றிக்கொண்டு மற்றொரு காலால் 180 டிகிரியில் குதித்துக்கொண்டே திரும்பி, மற்றொரு காலை ஊன்றினார். மிக கடினமான பயிற்சியை செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

My first shot at 180 landings. Top exercise 👌

A post shared by Virat Kohli (@virat.kohli) on

இவ்வளவு வேகம் எதுக்கு .! கொஞ்சம் மெதுவா சாப்பிடலாமே..!

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்ட வீரரான டேவிட் வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். மேலும் ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபில் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் . பல கிரிக்கெட் வீரர்கள்தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் என்றே கூறலாம்.

இந்நிலையில் சோளம் சாப்பிட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அதில் துளை இடும் மிஷினில் சோளத்தை அதில் வைத்து சாப்பிட தொடங்கினார், அதற்கு பின் அவரது பல்லில் காயம் ஏற்படுகிறது இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் அந்த விடீயோவிற்கு மேல் இதை வீட்டில் செய்து பாக்காதீங்க என்று குறிப்பிட்டுள்ளார், இதோ அந்த வீடியோ.

 

நான் இந்த வீரர்களை ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன்.!

வெஸ்ட் இண்டீஸ்  கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ  சமீபத்தில்  ரசிகர்களுடன் இணையதளத்தில் அளித்துள்ள பேட்டியில் கேள்விகளை கேட்டு வந்த நிலையில் முதல் கேள்வியாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிரையன் லாரா இடையே ஊன்றியபடி இருவரும் கையால் யார் பலசாலி என்று ஒரு போட்டி நடத்தினால் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி கேட்டனர் , அதற்கு பதிலளித்த வெய்ன் பிராவோ சமம் ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.

அடுத்ததாக வெய்ன் பிராவோவிடம்  உங்களுடைய பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்க எந்த வீரர்களை எடுக்க ஆசை என்று கேட்டனர் அதற்கு பதில் கூறிய அவர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தா பொல்லார்ட், விராட் கோலி, டிவிலியர்ஸ்  விக்கெட்தான் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

உங்க டிக் டாக் வீடியோவை விட இது எவ்ளோவோ மேல் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த -விராட் கோலி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிலே முடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

எப்போ என்னெவென்றால் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பழைய புகைப்படம் ஒன்றை வெளிட்டுள்ளார் இதை கண்ட பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் “அந்த தாடியை கொஞ்சம் ஷேவ் செய்யவும்” என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.இதற்கு டக்குனு உங்க டிக் டாக் வீடியோவை விட இது எவ்ளோவோ மேல் என்று நச்சுனு பதிலடி கொடுத்தார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் முடி வெட்டும் கடைகள் பூட்டி இருந்ததால் விராட் கோலி மனைவி இவருக்கு முடி வெட்டும் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டார் அது செம்ம வைரலானது.

 

View this post on Instagram

 

Throwback 👀

A post shared by Virat Kohli (@virat.kohli) on

சவுரவ் கங்குலி தான் அடுத்த ஐ.சி.சி தலைவராக இருப்பார் – கிரேம் ஸ்மித்

சவுரவ் கங்குலி தான்  அடுத்த ஐ.சி.சி தலைவராக இருக்க வேண்டும்: சி.எஸ்.ஏ கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார் .

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனரும் முன்னாள் வீரருமான கிரேம் ஸ்மித்  தற்போதைய பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி தான் அடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .

அவர் கூறுகையில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க “ஐ.சி.சி  சரியான தலைவரை  நியமிக்க வேண்டியது கட்டாயத்தில் உள்ளது, என்றும் இந்திய  அணியின் முன்னாள் கேப்டனாக இருக்கும் கங்குலி ஐசிசி யை வழிநடத்த சரியான நபராக இருப்பார் என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி.யின் தற்போதைய தலைவரும், பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவருமான சஷாங்க் மனோகர் கடந்த டிசம்பரில் தனது பதவிக்காலம் 2020 மே மாத இறுதியில் முடிவடையும் போது மீண்டும் போட்டியிட மாட்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .

 

 

அனுஷ்கா பேட்டிங் ! விராட் பௌலிங் கிரிக்கெட்டில் காதல்

விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அவர்களது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் தாங்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக  வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அவர்களது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் முதலில் அனுஷ்கா சர்மா பேட்டிங் செய்ய, விராட் கோலி பந்து வீசுகிறார். அதன் பின்னர், அனுஷ்கா ஷர்மா பந்து வீச, விராட் கோலி தனக்கான கையுறைகளை அணிந்து கொண்டு பேட்டிங் செய்கிறார். பின்னர் அவர்களுடன் மற்றொருவரும் இணைந்து விளையாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அவர்களது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் தாங்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அவர்களது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் முதலில் அனுஷ்கா சர்மா பேட்டிங் செய்ய, விராட் கோலி பந்து வீசுகிறார். அதன் பின்னர், அனுஷ்கா ஷர்மா பந்து வீச, விராட் கோலி தனக்கான கையுறைகளை அணிந்து கொண்டு பேட்டிங் செய்கிறார். பின்னர் அவர்களுடன் மற்றொருவரும் இணைந்து விளையாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தோனி கோபப்பட்டு பாத்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன்.. கம்பிர் ஓபன் டாக்!

இந்தியா மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர், மகேந்திர சிங் தோனி. இவர் பல நெருக்கமான சூழலிலும் தனது பொறுமையை இழக்காமல், பிற வீரர்களிடம் கோபப்படாமல், அதனை நிதாரணமாக கையாளுவார். அதனால் ரசிகர்கள் இவரை “கேப்டன் கூல்” என்று அழைத்துவருகின்றனர்.

இந்நிலையில், தோனியுடனான கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பல வீரர்களும் பேசி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில், தோனி பொதுவாக கோபப்படமாட்டார் என அனைவரும் கூறிவருகின்றனர். ஆனால் அவர் கோபப்பட்டு நான் இருமுறை பார்த்திருகிறேன்.

2018 IPL retention: Kolkata Knight Riders keep Gautam Gambhir out ...

2007 மற்றும் 2011 ஆம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடாமல் இருந்தபோது அவர் கோபபட்டிருக்கிறார். மேலும், ஐபிஎல் போட்டியில் பொது வீரர்கள் ஒழுங்காக பில்ட்டிங் செய்யாதபோது அவர் கோபப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் அவரின் கோபம் நியாயமானதுதான் என கூறிய அவர், “தோனி கூல்தான். உலகில் உள்ள மற்ற நாடுகளின் கிரிக்கெட் கேப்டன்களை  ஒப்பிட்டுப்பார்த்தால், அவர் கூல்தான்” என கம்பிர் கூறினார்.

கொரோனா லாக்டவுனில் ஒருநாள் போட்டிகான புதிய கேப்டன் அறிவிப்பு ! ரசிகர்கள் சோகம்….!

கடந்த ஆண்டு நடைப்பெற்ற உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே தோல்வி அடைந்தது. அப்போது பாகிஸ்தானின் அனைத்து வடிவ போட்டிகளுக்கு சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்தார். பாகிஸ்தான் லீக் சுற்றிலேயே வெளியேற கேப்டன் சர்பராஸ் தான் முக்கிய காரணம் என்பதால் அவரிடம் இருந்து கேப்டன் பதவியை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது.

இந்நிலையில்,பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் மொத்தம் 26 டெஸ்ட், 74 ஒருநாள் மற்றும் 38 டி20 தொடர்களில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது சர்பராஸ் பதிலாக பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து பாபர் அசாம் ஒருநாள் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் அணியின் அமோகமான ஐடியா ! சி.எஸ்.கே அணி கடும் எதிர்ப்பு !

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதன் காரணமாக ஐ.பி.எல் தொடரை எப்படியாவது நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கையில் ஐ.பி.எல் நடத்த அனுமதி கேட்டுள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரசிகர்கள் இல்லாமல் ஐ.பி.எல் நடத்தலாம் என்று ஆலோசனை கூறி வருகின்றனர். அந்தவகையில், ஐபிஎல் தொடரை இந்திய வீரர்கள் மட்டும் பங்கேற்று விளையாடினால் வெறித்தனமாக இருக்கும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.

இந்திய வீரர்கள் மட்டும் பங்கேற்று ஐபிஎல் போட்டிகள் நடந்தால் அது உண்மையான ஐ.பி.எல் தொடராக இருக்கும். இதே கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கருத்தை சி.எஸ்.கே அணி மறுப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஐ.பி.எல் நடந்தால் பி.சி.சி.ஐ நடத்தப்படும் உள்ளூர் தொடரான ‘சையது முஷ்தாக் அலி டிராபி’ தொடர் போல் இருக்கும் என்று சி.எஸ்.கே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.